Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழக தேர்தல் 6 மாதங்களுக்கு ரத்து?… பெரும் பரபரப்பு….!!!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக தேர்தலை ஆறு மாதத்திற்கு ஒத்தி வைக்க உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி தாங்கள் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வேட்புமனு பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிட்டு கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக தேர்தலை ஆறு மாதத்திற்கு ஒத்தி வைக்க உலக சுகாதார அமைப்பு அறிக்கை அளித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அபாயத்தை தவிர்க்க தேர்தலை தள்ளிவைக்க தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அவசர சட்டத்தை பாராளுமன்ற கூட்டத்தொடரில் மோடி நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையானதா என தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

Categories

Tech |