Categories
தேசிய செய்திகள்

மக்களே… நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 13 நாட்கள் வங்கிகள் செயல்படாது… அதிர்ச்சி தரும் செய்தி…!!!

நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் மூடப்படும் என அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏதாவது வங்கியில் முக்கிய வேலை இருந்தால் இந்த மாதத்தின் இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் முடித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது. அதன்படி ஏப்ரல் 1 வருடாந்திர கணக்கு சரிபார்ப்பு, ஏப்ரல் 2 புனித வெள்ளி, ஏப்ரல் 4 ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 5 தெலுங்கு வருட பிறப்பு, ஏப்ரல் 13, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 15 பெங்காலி புத்தாண்டு, ஏப்ரல் 21 ராம நவமி, ஏப்ரல் 25 மகாவீர் ஜெயந்தி ஆகிய நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஏப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 24 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஏப்ரல் 4,11,18,25ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் மூடப்படும். எனவே ஏப்ரல் மாதம் முழுவதும் வங்கிகள் 13 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |