Categories
தேசிய செய்திகள்

தமிழக தேர்தல் ஆறு மாதங்களுக்கு ரத்து…? பெரும் பரபரப்பு..!!

தமிழகத்தில் தேர்தல் 6 மாதத்திற்கு தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சியினர் போட்டி போட்டு ஒவ்வொரு பகுதியாக சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கொரோனா தொற்றும் அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது தொற்று அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளதாக பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஆறு மாதத்திற்கு ஒத்தி வைக்க உலக சுகாதார அமைப்பு அறிக்கை அளித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அபாயத்தை தவிர்க்க தேர்தலை தள்ளி வைக்க தலைமை தேர்தல் ஆணையமும் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அவசர சட்டத்தை பாராளுமன்ற கூட்டத்தொடரில் மோடி நிறைவேற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. தகவல் உண்மையா என தேர்தல் ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

Categories

Tech |