Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன் … உச்ச கட்ட மகிழ்ச்சியில் பொது மக்கள்..!!

வடகாடு பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில்  திருவிழா தேரோட்டத்துடன் சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடகாடு பகுதியிலிருக்கும் வாணக்கன் காட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஒன்பதாவது நாளான நேற்று தேரில் முத்துமாரியம்மன்னை அலங்காரம் செய்து தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேரோட்டத்தில் எந்தவித பிரச்னையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

Categories

Tech |