Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 5-ல் நடிகர் நகுல் கலந்து கொள்கிறாரா?… அவரே வெளியிட்ட வீடியோ…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகர் நகுல் கலந்துகொள்வதாக பரவிய தகவலுக்கு அவரே விளக்கமளித்துள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்க இருப்பதாகவும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் நகுல் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் கனி உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் பிக் பாஸ் செல்வது குறித்து நடிகர் நகுல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ‘எல்லோருக்கும் வணக்கம். சிலர் நான் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கு போவதாக என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பிக்பாஸில் கலந்து கொள்ள என்னிடம் யாரும் தொடர்பு கொண்டு பேசவில்லை. அப்படியே தொடர்புகொண்டு பேசினாலும் இந்த தங்கத்தை விட்டுட்டு என்னால்  பிக்பாஸ் போக முடியாது’ என்று தனது மடியில் இருக்கும் குழந்தையை பார்த்து கூறுகிறார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நகுல் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது .

Categories

Tech |