Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியில் …சச்சின் தலைமையில் இந்திய அணி …இலங்கையை வீழ்த்தி வெற்றி …!!

மும்பையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு   உலக கிரிக்கெட் தொடரின்  20 ஓவர் கான இறுதிப்போட்டியில், இந்தியா இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் மும்பையில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமையில் அமைந்த இந்திய அணியும், தில்ஷன் தலைமையில் அமைந்த இலங்கை அணியும் விளையாடினர். இந்த ஆட்டத்தில் முதலில் இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது . இதில்  இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு, 181 ரன்கள் எடுத்தது.

இந்த ஆட்டத்தில்  சிறப்பாக விளையாடிய  யுவராஜ் சிங் 41 பந்துகளில் 60 ரன்களும், யூசுப்பதான் 36 பந்துகளில் 62 ரன்கள் அடித்து விளாசினர். அணியின் கேப்டன் சச்சின் 30 ரன்கள் எடுத்தார். இதன்பின் களமிறங்கிய இலங்கை அணி 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது .ஆனால்  இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்று  சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.

Categories

Tech |