தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து சீமான் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். எண்ணுரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், “எனக்கு இந்த முறை வாய்ப்பளித்தால் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பிச்சை எடுத்தாவது தீர்த்து வைப்பேன்” என்று பேசியுள்ளார். தற்போது இவருடைய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.