மதுரையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை ரோந்து சென்ற காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதி முறைகளையும், நடத்தைகளையும் அமுலுக்குக் கொண்டுவந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு பறக்கும் படையினரையும் நிலை கண்காணிப்பு குழுவினரையும் நியமித்துள்ளனர். இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த காவல்துறையினர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கள்ளம்பட்டியைச் சேர்ந்த ராகுல் என்பவர் 2 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மஞ்சள் பையில் வைத்திருந்திருக்கிறார். இதனை கண்டுபிடித்த காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, ராகுலையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.