ஜலகாண்டபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் அசோக் ரத்தினம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே பக்கவாத நோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் மிகவும் மனமுடைந்த அசோக், இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.