இளம்பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிய கல்வி காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகாரை அளித்தார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவலர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்திருந்த காவல் உதவி ஆய்வாளர் தீபக் எனக்கு அறிமுகமானார். அவர் என்னிடம் செல்போன் எண்ணை கேட்டார். நானும் காவலர் தானே என்று நம்பி எனது செல்போன் எண்ணை கொடுதேன். ஆனால் நாளாக நாளாக அவர் எனது செல்போனுக்கு ஆபாச படங்களை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தீபக் சிங் மற்றும் காவலர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.