சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் இருக்கும் சேலம் தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் ஆதார் சிறப்பு முகாம் 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம் உட்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். பயோமெட்ரிக் பதிவிற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு இலவசமாக எடுத்து தரப்படும்.
ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய விரும்புவர்கள் ரேஷன் கார்டு, தபால் நிலைய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆயுள்காப்பீடு சான்றிதழ், கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வர வேண்டும். மேலும் அவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தபால் துறை அறிவித்துள்ளது.