மல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியிலிருக்கும் கிராம காட்டடூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சுந்தரம் மற்றும் ஏர்வாடி கிராமத்தில் வசிக்கும் அம்மாசி ஆகிய இருவரும் நேற்று மல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அம்மாசியை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சுந்தரத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.