Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு சுகர் இருக்கு…. நானும் மாத்திரை சாப்பிடுறேன்… உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த அமைச்சர்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக, திமுக ஆட்சியை பிடிக்க கடுமையான சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சியினரின் குறைகளை சொல்லியும், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்தவகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், எனக்கும் சுகர் இருக்கு, நானும் மாத்திரை சாப்பிடுகிறேன் என்று உருக்கமாக பேசி வாக்கு சேகரித்துள்ளார்.

Categories

Tech |