Categories
தேசிய செய்திகள்

போனில் புக் செய்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்…. நேர்மையுடன் நடந்துகொண்ட ஏழை பெண்…. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நபர்…!!

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லாட்டரி டிக்கெடிற்கு விழுந்த பரிசு தொகையை உரிய நபரிடம் ஒப்படைத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அப்பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் வேலை செய்து வருகின்றார். இவருக்கு உடல்நலம் பாதித்த இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் இவரிடம் தினசரி வாடிக்கையாளராக சந்திரன் என்பவர் கடனுக்கு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். இவ்வாறாக ஒரு நாள் கோடைகால பம்பர் பரிசு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஸ்மிஜாவிற்கு போன் செய்த சந்திரன்  316142 என்ற என்னுடைய லாட்டரி டிக்கெட்டுகளை பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த லாட்டரி டிக்கெட்கள் ஸ்மிஜாவின் கைவசம் இருந்துள்ளது.

இதனையடுத்து திடீரென 316142 என்ற என்னுடைய லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ரூபாய் 6 கோடி விழுந்துள்ளது. அதன்பின்னர் ஸ்மிஜா மோகன், சந்திரனை அழைத்து அந்த லாட்டரி டிக்கெட்டை அவரிடம் ஒப்படைத்துவிட்டு பரிசு தொகை விழுந்துள்ள விவரத்தையும்  கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சந்திரன் லாட்டரி டிக்கெட்டிற்கு கொடுக்க வேண்டிய ரூ. 200 உடனடியாக கொடுத்து விட்டு கண்ணீர் மல்க ஸ்மிஜா மோகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது குழந்தைகளுக்கு சிகிச்சை செய்ய பணம் தேவைப்பட்டும் அந்த ஏழை பெண் நேர்மையுடன் பரிசு தொகை விழுந்த லாட்டரி டிக்கெட்டை உரிய நபரிடம் ஒப்படைத்துள்ள நிகழ்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |