அமெரிக்க அதிபரான ஜோ பைடன் விமானத்தில் ஏறும் போது படிக்கட்டில் தடுமாறி விழுந்ததை கண்டு கொள்ளாத அமெரிக்க ஊடகங்களை முன்னாள் அதிபர டிரம்ப் திட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அட்லான்டா செல்வதற்காக விமானத்தின் படிக்கட்டில் ஏறும்போது மூன்று முறை தடுமாறி மூன்றாவது முறையில் விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இதனைப் பற்றி செய்திகள் வெளியிடும் போது அமெரிக்க ஊடகங்கள் மட்டும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனை குறித்து முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் கூறியதில் ,ஜோ பைடன் தடுமாறுவதை பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்ததாகவும் இதனை குறித்து அமெரிக்க ஊடகம் கண்டு கொள்ளாமல் இருந்ததாகவும் கூறியுள்ளார் .
இதுமட்டுமின்றி இன்னொரு கருத்தையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஜோ பைடனிற்கு மூளையின் செயல்பாடுகள் குறைந்து கொண்டு வருவதாகவும் அவர் எந்த ஆவணத்தில் கையெழுத்திடுகிறோம் என்று புரிந்து கொண்டு தான் கையெழுத்திடுகிறாரா என்பதே அவருக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் .மேலும் ஜோ பைடன் இவ்வாறு தடுமாற்றம் இருக்கும் பட்சத்தில் அவரது கட்சியினர் 25 ஆவது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி கமலா ஹாரிஸை அதிபராக பொறுப்பேற்க வைக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.