Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மகளின் திருமண விருந்திற்கு சென்றவர்களுக்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… பெரம்பலூரில் பதற்றம்..!!

பெரம்பலூரில் வீட்டின் ஜன்னல் கம்பியை பெயர்த்தெடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் சாம்சன் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாதிரியார். இவருக்கு லில்லி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கெத்சியா, சோபியா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான சோபியாவிற்கு சென்ற பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவருடன் திருமண விருந்திற்காக சோபியா கடந்த 14-ஆம் தேதியன்று மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் தனது பெரியம்மா மற்றும் தாத்தா வீட்டிற்குச் சென்றுள்ளார். சாம்சன் கிறிஸ்டோபர் தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளார். அதன்பின் கடந்த 19-ஆம் தேதி அன்று அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது அங்கு பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஜன்னலில் இருந்த ஒரு கம்பி பெயர்க்கப்பட்டு மெத்தையில் கிடந்துள்ளது.

அதன் பின் அவர்கள் அறையிலிருந்த பீரோவை சோதனை செய்து பார்த்தனர். அப்போது ரூ.65 ஆயிரம் பணத்தையும், 6 பவுன் நகையையும், ரூ.8,000 மதிப்பிலான அழகுசாதனப் பொருட்கள், கொலுசு மற்றும் வெள்ளி டம்ளர் ஆகியவற்றில் ஆளில்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் திருடுபோன வீட்டிற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலைக்கப்பட்டது. வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |