சிவகங்கை தேவகோட்டை அருகே பங்குனி மாதத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் சாமியாடி பெரியகருப்பன் தெருவில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும். அதேபோல் இந்த வருடமும் பங்குனி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் வண்ண பூக்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சமயபுரம் மாரியம்மனுக்கு சந்தானலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இந்த கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்ள் சந்தானலட்சுமி அலங்காரத்தில் இருந்த சமயபுரம் மாரியம்மனை தரிசித்து சென்றனர். மேலும் தங்கள் செல்போன்களில் அம்மனை புகைப்படம் எடுத்து சென்றனர்.