அன்னதானப்பட்டியில் ரோந்து பணியின் போது சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் திருச்சி கிளை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்த ராஜேந்திரன் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள் செல்லமாட்டோம் என எதிர்த்து பேசியதுடன், சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இதனையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.