Categories
மாநில செய்திகள்

Flash News: சென்னையில் மீண்டும் – அரசு பகீர் செய்தி…!!!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளது. மேலும் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் மீண்டும் குடும்பம் குடும்பமாக கொரோனா பரவுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குறிப்பாக மடிப்பாக்கம், தி. நகர், மயிலாப்பூர், கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர் ஆகிய பகுதிகளில்  கொத்துக்கொத்தாக பரவும் ஆபத்து நிறைந்த பகுதிகள் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |