Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறை தகவல்..!!

பெரம்பலூரில் ஒரே நாளில் கொரோனா வைரஸால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும்ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,271 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் பெரம்பலூர்-எளம்பலூர் சாலை பகுதியில் ஒரே வீட்டில் ஆசிரியர்களின் மகன், ஆசிரிய தம்பதி என 3 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சுகாதாரத்துறையினர் அவர்களுடைய வீட்டில் தடை செய்யப்பட்ட பகுதி என்று எச்சரிக்கை பதாகை ஒன்றை தடுப்பு கம்பிகளில் தொங்க விட்டுள்ளனர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று கொரோனாவால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 446 பேருக்கு பெரம்பலூரில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் விரைவில் தெரிய வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |