ராணிப்பேட்டையில் 2,490 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மாரிமங்கலத்தில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி செந்தில் குமார் என்பவர் தடை செய்யப்பட்ட பொருட்களான குட்கா, புகையிலை பாக்கெட்டுகள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக தக்கோலத்திற்கு அருகே உள்ள மாந்தோப்பில் வீடு ஒன்றினை அமைத்து அதில் தடை செய்ய பொருட்களை பதுக்கி வைத்து இரவு நேரத்தில் மினி லாரி மூலம் கடத்தும் தொழிலை செய்து வந்துள்ளார். இத்தகவலை ரகசியமாக காவல்துறையினருக்கு அடையாளம் தெரியாத நபர் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர்கள் அவ்வீட்டில் வந்து பரிசோதனை செய்ததில் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அதாவது சுமார் 2,490 கிலோ எடையுள்ள குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள், புகையிலை போன்றவை இருந்துள்ளது. இவை அனைத்தையும் காவல்துறையினர்கள் பறிமுதல் செய்ததோடு கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் மினி லாரி உரிமையாளரை கைது செய்த காவல்துறையினர்கள் தலைமறைவான கீதா மற்றும் அவரது தம்பியை தேடி வருகின்றனர்.