Categories
மாநில செய்திகள்

“இன்சூரன்ஸ்” பணத்திற்காக தாய், தந்தையை கொன்ற மகன்… ஆந்திராவில் பரபரப்பு..!!

ஆந்திராவில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தாய்,தந்தை கழுத்தை மகன் அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுவுக்கு அடிமையான நாராயண ரெட்டி தனது பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தவும், வெளியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் தான் பணிபுரிந்து வந்த நிதி நிறுவனத்தின் வசூல் நிதி 3 லட்சம் ரூபாயை முறைகேடு செய்துள்ளார்.

Related image

இதனை கண்டுபிடித்த அந்நிறுவனம் உடனடியாக பணத்தை செலுத்த நெருக்கடி கொடுத்தது. இந்நிலையில் தனது தாய் ஆதியம்மா பெயரில் பஜாஜ் அலையன்ஸ்  இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 15 லட்சம் ரூபாயை நாராயணரெட்டி காப்பீடாக செலுத்தி வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 21-ஆம் தேதி இரவில் தனது தாய் ஆதியம்மாவிற்கும் தந்தை வெங்கட் ரெட்டிக்கும் மோரில் அதிக அளவு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உள்ளார்.

Related image

அதன் பின் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு கை,மணிக்கட்டு மற்றும் கழுத்து போன்ற பகுதிகளை அறுத்து இருவரையும் கொலை செய்ததையடுத்து, அதனை மறைக்க மறுநாள் காலை யாரோ மர்ம நபர்கள் தனது பெற்றோரை கொன்று விட்டு பணத்தை எடுத்துச் சென்று விட்டதாக நாடகமாடி உள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து  நடத்திய விசாரணையில், நாராயண ரெட்டி தனது தாய் தந்தையை இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |