ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய்வின் முதல் டீவீட்டை மலேசியாவை சேர்ந்த ஒருவர் 2.9 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அன்று ட்விட்டர் நிறுவனரான ஜாக் டோர்செய் முதன்முதலில் ‘just setting up my twttr ‘ என்று ட்வீட்டை பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நன்கொடை வழங்குவதற்காக விற்கப்பட்டுள்ளது. ஜாக் டோர்செய் 15 மில்லியன் டாலர் ஏழை குடும்பங்களுக்காக நன்கொடையாக வழங்கினார். அதில் இந்த பணத்தை சேர்த்து வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த டீவீட்டை சினா எஸ்டேவி எனும் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் 2.9 மில்லியன் கொடுத்து வாங்கியுள்ளார் .இந்த ட்வீட்டின் மதிப்பு குறித்து மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு உணர்வார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.