கும்பகோணம் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர் 300 பேருக்கு கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியிலுள்ள தாராசுரம் மார்க்கெட் பல மாதங்களாக தொற்று காரணமாக மூடப்பட்டிருந்தது. தற்போது சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து மார்க்கெட்டில் சுமார் 600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முதற்கட்டமாக மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர் சுமார் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் கும்பகோணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், வியாபார சங்க தலைவர், பொருளாளர் என பலர் கலந்து கொண்டனர்.