Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிராமத்தை குறிவைத்து தாக்கிய கொரோனா… தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பணி… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை பகுதியில் கடந்த 19-ஆம் தேதி மட்டும் நான்கு பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அந்த கிராமத்தில் முகாமிட்டு அங்குள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த கிராமத்திற்கு வெளியூரில் இருந்து மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கிராமத்தை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, நிலக்கோட்டை ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ், துப்புரவு பணியாளர்கள், ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி தலைவர் பவுன்தாய் ஆகியோர் முகாம் அமைத்து அந்த கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அந்த கிராமத்தில் செய்யப்படும் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகலட்சுமி, நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா, சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் ஆகியோர் இருந்தனர்.

Categories

Tech |