சாலையோர கடையில் சாப்பிட்ட உணவின் மூலம் 2 வயது சிறுவனின் வாழ்க்கையே பறிபோயுள்ளது.
2018 ஆம் ஆண்டு Nathan Parker – Karla Terry என்ற தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் உள்ள டிஸ்னிலேண்ட்-க்கு வந்தனர். அப்போது அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள சாலையோர கடையில் வைக்கப்பட்டுள்ள சாலட்டை தங்களது 2 வயது மகன் Lucas-க்கு வாங்கி கொடுத்துள்ளனர். அந்த ஒரு சாலட்டால் இந்தக் குடும்பத்தின் மொத்த மகிழ்ச்சியும் பறிபோனது. ஏனென்றால் அந்த சமயத்தில் கனடாவிலும் அமெரிக்காவிலும் ஈகோலை என்றழைக்கப்படும் ஒரு வகை கிருமி வேகமாக பரவியது.
அப்போது ஈகோலை கிருமியால் 35 பேர் பாதிக்கப்பட்டனர். அதே வகை கிருமியால் தான் Lucas-ம் பாதிக்கப்பட்டிருந்தான் . பின்னர் Lucas உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் கூட அவனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று செயலிழந்தது. அவனது மூளையில் இரண்டு இடத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும் Lucas-ல் பேசவும், பார்க்கவும் முடியாமல் போனது . பின்னர் நடக்கவும் முடியாமல் போனது. தற்போது Lucas-க்கு ஐந்து வயது ஆகின்றது.
இருப்பினும் அவனுக்கு உணவை குழாய் மூலம் தான் அவனது பெற்றோர் வழங்குகின்றனர். இது எல்லாவற்றிற்கும் காரணம் என்னவென்றால் அந்த சாலட்டிலிருந்த லெட்டூஸ் என்னும் கீரை, அந்த லெட்டூஸ் கீரையில் தான் கிருமி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் உணவு பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவரும் Bill Marler என்ற வழக்கறிஞர் லூகாஸ் குடும்பத்தின் சார்பாக அந்த சாலட் கடை, மற்றும் அந்த கடைக்கு லெட்டூஸ் கீரைகள் வழங்கிய பண்ணைகள் ஆகியவற்றின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த கீரையில் ஈகோலை கிருமி இருந்ததற்கு காரணம் அங்கு வளர்க்கப்பட்ட மாடுகளின் கழிவு தண்ணீருடன் கலந்து தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கீரைகளுக்கு பரவியது. இறுதியில் அந்த கிருமிகள் Lucas -ன் வாழ்க்கையை சீரழித்து விட்டது. இருப்பினும் Lucas-ஐ அவனது தாயும் தந்தையும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கின்றனர்.