பிரிட்டனில் 8 மாத குழந்தை பலூனில் உள்ள நூல் கழுத்தை இறுக்கியத்தில் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனிலுள்ள கிரேட்டர் மான்செஸ்டரில் வசிக்கும் தம்பதி Jackenson Lamour, Brandy Kimberely Harvey. இவர்களுக்கு மலேசியா என்ற 8 மாத குழந்தை உள்ளது. குழந்தையை கணவன் மனைவி இருவர் மட்டுமே பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவர் இரவு நேர வேலைக்கு சென்று விட்டதால் மனைவி பகல் நேர பணிக்கு சென்றுவிட்டு வந்து இரவு நேரத்தில் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது பாத்திரங்களை கழுவுவதற்காக சமயலறைக்கு சென்றிருக்கிறார் Harvey. எனினும் குழந்தையின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டேதான் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென்று குழந்தையின் சத்தம் நின்று விட்டதால் உடனடியாக ஓடி சென்று பார்த்துள்ளார்.
அங்கு Harvey கண்ட காட்சி அவரை திடுக்கிட செய்துள்ளது. அதாவது Jackenson, காதலர் தினத்தன்று இதயத்தின் வடிவமுடைய பலூன் ஒன்றை Harveyக்கு கொடுத்துள்ளார். அதனை கட்டிலில் கட்டி வைத்திருந்திருக்கிறார் Harvey. அந்த குழந்தை பலூனை எடுக்க முயற்சிக்கும் போது பலூனில் உள்ள நூல் குழந்தையின் கழுத்தில் சுற்றி கட்டிலிலிருந்து கீழே விழுந்தவுடன் கழுத்தை இறுக்கியதால் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.
எனினும் உடனடியாக நூலை வெட்டிய Harvey அவசர உதவியை அழைத்திருக்கிறார். ஆனால் அவர்களால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தையின் பெற்றோர் இருவருமே குழந்தையை அன்பாக பார்த்துக் கொள்வார்கள் என்று அக்கம் பக்கத்தினர் அனைவருமே கூறியுள்ளனர். எனவே குழந்தை விபத்தினால் உயிரிழந்தது என்று நீதிமன்றம் முடிவு செய்துவிட்டது.