Categories
தேசிய செய்திகள்

கொரோனா கால கடனுக்கு வட்டிக்குவட்டி…? உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

கொரோனா  காலத்தில் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி வசூல் செய்தால் அந்த தொகையை வாடிக்கையாளருக்கு திரும்ப அளிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா  காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கூடுதல் அவகாசம் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை செய்தபோது கொரோனா காலத்தில் வங்கி கடனுக்கான காலத்தை ஆறு மாதத்திற்கு மேல் நீடிக்க முடியாது என்றும், இந்த காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி கூறுகையில் நாங்கள் தலையிட முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா  காலத்தில் 2 கோடி வரையிலான கடன் வட்டி வசூல் செய்து இருந்தால் அதை திருப்பி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வங்கி கடன்களை திருப்பி செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |