பிரிட்டனில் வசிக்கும் பெண் ஒருவர் ஆண்களை நிமிர்ந்து பார்த்தால் மயங்கி விழுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களையே நிமிர்ந்து பார்க்காத பெண் உலகில் வசிக்கிறார் என்றால், அது மிகப்பெரிய ஆச்சர்யம் தான். அதிலும் பிரிட்டனிலும் வசிப்பது நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். வேறொன்றும் இல்லை அந்த பெண்ணிற்கு ஒரு வகை நோய் உள்ளது. அவரை பற்றி காண்போம். பிரிட்டனில் வசிக்கும் 32 வயதுள்ள பெண் Kirsty Brown.
இவருக்கு மூளையில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதாவது கோபம், சிரிப்பு, அழுகை, பயம் என்று எந்த உணர்வு மிகுதியாக வந்தாலும் மயங்கி விழுந்து விடுவாராம். இதில் கவர்ச்சியும் அடங்கும். அதாவது கவர்ச்சிகரமான ஆண் ஒருவரை வெளியில் பார்த்தால் அங்கேயே மயங்கி விடுவாராம். எனவே அதிகமாக Kirsty வெளியில் செல்வதை தவிர்த்து வருகிறார்.
எப்போதாவது வெளியில் சென்றாலும் ஆண்களை பார்க்காமல் தலைகுனிந்தபடியே செல்வாராம். இவர் தன் சோகத்தை மறைத்துகொண்டு இதிலும் நன்மை இருக்கத்தான் செய்கிறது என்று வேடிக்கையாக கூறுகிறார். அதாவது என்னிடம் யாராவது வம்பு இழுத்தால் அவர்களிடம் சண்டையிட ஆரம்பித்தவுடன் மயங்கி விடுவேன். இதனால் சண்டை வளராது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.