ஹைதராபாத் மாநிலத்தில் சொத்து தகராறில் அண்ணன் மனைவியை தேங்காய் வெட்டும் அரிவாளால் தம்பி வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஷபனா பேகம்.இவரின் கணவர் ஜஹாங்கிர். இவருக்கும் இவரின் தம்பிக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அடிக்கடி அவர் தம்பி ஜஹாங்கிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். ஒருநாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆத்திரத்தில் ஜஹாங்கிரின் தம்பி காசா ஷபனாவை தேங்காய் வெட்டும் அரிவாளால் வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷபனாவை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள காஸாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.