“தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்கில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத் திரையுலகில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்.முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதற்கிடையில் ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது. அதன்படி பிரபல பாடகியான சின்மயின் கணவரும், நடிகருமான ராகுல் ரவீந்திரன் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது.