Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மானாமதுரை சட்டமன்ற தொகுதியில்…. இவங்க தான் போட்டியிட போறாங்க….. இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவகங்கை மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 13 பேர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழரசி, அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் உள்ளிட்ட 17 பேர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் தி.மு.க. , அ.தி.மு.க. வேட்பாளர்கள் நான்கு பேர்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 பேர் இறுதி வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கட்சி, பெயர் விவரம், சின்னம் ஆகியவை பின்வருமாறு;-

1. தமிழரசி (தி.மு.க.)- உதயசூரியன்

2. சிவசங்கரி (மக்கள் நீதி மய்யம்)- டார்ச் லைட்

3. முரளிதரன் (அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் இயக்கம்)- கடாய்

4. ராஜய்யா (சுயே)- தொலைக்காட்சிப் பெட்டி

5. தாமரைச்செல்வி (சுயே)- அன்னாச்சி

6. மாரியப்பன் கென்னடி (அ.ம.மு.க.)- குக்கர்

7. நாகராஜன் (அ.தி.மு.க.)- இரட்டை இலை

8. முத்துமாரி (சுயே)- பரிசு பெட்டகம்

9. ராஜேந்திரன் (மை இந்தியா பார்ட்டி)- கண்காணிப்பு கேமரா

10. சண்முகப்பிரியா (நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி

11. துரைப்பாண்டி (சுயே)- இரட்டை தொலைநோக்கி

12. கருப்பையா (சுயே)- கனசதுரம்

13. சந்திரசேகர் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)- கண்ணாடி டம்ளர்.

Categories

Tech |