Categories
தேசிய செய்திகள்

“நான் அரசு வேலை வாங்கி தருகிறேன்” எனக்கூறி… இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த எம்எல்ஏவின் மருமகன்..!!

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாகுபலி தொகுதியின் எம்எல்ஏ மருமகன் மீது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் எம்எல்ஏவின் மருமகன் மற்றும் அவரது உறவினர் மீது காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் புகாரில் கூறியுள்ளதாவது: “உத்திர  பிரதேச எம்எல்ஏவின் மருமகன் எனக்கூறி மனிஷா என்பவர் தன்னிடம் அறிமுகமானார். அவர் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

மேலும் அவரது உறவினர்களும் என்னை துன்புறுத்தின.ர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எம்எல்ஏவின் உறவினர் உட்பட இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |