Categories
உலக செய்திகள்

“வீட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட சாக்கடை மூடி”… மூடிக்குள் என்ன இருந்தது தெரியுமா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள வீட்டிற்குள் பழங்காலத்து பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் Jennifer Little என்ற பெண் எஸ்டேட் மேலாளராக இருக்கிறார். இவர் அப்பகுதியில் 1951 ஆம் ஆண்டு  கட்டப்பட்ட வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த வீட்டின் படுக்கை அறையில் சாக்கடை மூடி போன்ற ஒரு பொருள் இருந்துள்ளது. அதனை Jennifer தனது நண்பரை கொண்டு திறந்து பார்த்த பொழுது அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது.

மூடிக்கு கீழே இருந்தது ஒரு பதுங்கும் குழி. எதற்கு அந்த குழி என்றால் அந்த காலகட்டத்தில் கலிபோர்னியாவில் உள்ள மக்கள் அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்புவதற்காக இப்படி ஒரு குழிகளை வீட்டிற்குள் உருவாக்கியுள்ளனர்.

அந்த பதுங்கு குழிக்குள் 2 பேர் தங்கிக்கொள்ளலாம்  . மேலும் அங்கு சிறுநீர் கழிப்பதற்கான வசதியும், உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு கருவியும் இருந்தது. இது குறித்து சமூக ஊடகங்களில் Jennifer விவரங்களை வெளியிட்டார் . அந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் இதனை சரி செய்து பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறியுள்ளனர்.

Categories

Tech |