Categories
தேசிய செய்திகள்

பாஜகவுக்கு ஓட்டு போட்டவர்களை பார்த்து கேட்கிறேன்…”15 லட்சம் உங்களுக்கு கிடைச்சுதா”…? மம்தா பானர்ஜி கேள்வி..!!

பாஜக மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளிக்கிறது என முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது கடந்தமுறை பாஜகவுக்கு வாக்களித்தவர்களிடம் நான் ஒன்றை கேட்கின்றேன். ஒவ்வொரு கணக்கிற்கும் 15 லட்சம் கொடுத்ததாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அது கிடைத்ததா? மேலும் அரிசி மற்றும் பருப்பு தருவதாக தவறான வாக்குறுதிகளை அளித்து உங்களை வாக்களிக்க சொல்கின்றனர்.

ஆனால் மம்தா பானர்ஜி அரசாங்கம் சொல்வதை தான் செய்கின்றது .அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் கிராமம், நகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் முன்னுரிமை அளித்து உள்ளோம் என்று கூறினார். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Categories

Tech |