பஞ்சாபில் காதலனை பார்க்க சென்ற காதலி மற்றும் அவரது தங்கையை காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்த குர்வீர் சிங். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகனாவார். குர்வீர் சிங் அதே பகுதியை சேர்ந்த கூர்மயில் சிங் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் தங்கைக்கு தெரியும். இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண் மற்றும் அவரது சகோதரி இருவரும் காதலனை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த குர்வீர் சிங் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அக்கா தங்கை இருவரையும் சுட்டுள்ளார். இதில் அந்த பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை எடுத்துக் அந்த பெண்களின் தந்தை தன்னுடைய பெண்கள் உயிரிழப்பு குறித்து பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் இதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குர்வீர் சிங் பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றினர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.