பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிக்கை கூறிய செய்திகள் தவறானது என்று பிரான்ஸ் பத்திரிகைகள் கருத்து தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.
பிரிட்டனின் பிரபலமான பத்திரிக்கை தி டைம்ஸ். இந்த பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த அமைச்சர் ஒருவர் பிரான்ஸ் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் பிரான்ஸில் தென்னாப்பிரிக்கா வகை கொரோனா பரவி வருகின்றது. இதனால் பிரான்சில் உள்ள மக்கள் பிரிட்டனுக்கு வந்தால் அங்குள்ள மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே பிரான்சில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் தவிர மற்றவர்களை உள்ளே நுழைவதற்கு அனுமதி அளிக்க கூடாது. மேலும் பிரிட்டனுக்குள் நுழைபவர்கள் 10 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பிரான்ஸ் பத்திரிக்கைகள் தங்கள் நாட்டில் பிரேசில், தென் ஆப்பிரிக்கா வகை கொரோனா 5% தான் பரவியுள்ளது. ஆனால் பிரிட்டன் நாட்டு கொரோனா தான் 72% பரவியுள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கார்டெஸ் தங்கள் நாட்டில் பிரிட்டன் வகை கொரோனாவின் மூன்றாவது அலை பரவுவதாக கூறிதான் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். எனவே தாங்கள் கூறிய கருத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தி மிரர், தி இண்டிபெண்டென்ட் பத்திரிக்கைகள் கருத்து தெரிவித்துள்ளது.