Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஸ்டைல்… துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் தல அஜித் எடுத்த செல்பி… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம் ‌. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்டபார்வை, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது . இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . மேலும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற மே 1-ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது . இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது நடிகர் அஜித் எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தல அஜித் செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |