Categories
உலக செய்திகள்

உலகப் புகழ்பெற்ற குளோபல் வில்லேஜ் கண்காட்சி… மே 2ஆம் தேதி வரை நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!

துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி மே மாதம் இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் நகரில் குளோபல் வில்லேஜ் என்ற கண்காட்சியின் 25 வது வெள்ளி விழா தற்போது பெற்று வருகிறது. இந்த குளோபல் வில்லேஜ் கண்காட்சி மக்களின் பொழுது போக்கிற்காகவும் மற்றும் கலாச்சாரத்தை மையமாகவும் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி வருகிற ஏப்ரல் மாதம் 18 ஆம்  தேதி வரை நடைபெறுவதாக கூறப்பட்டது.

குளோபல் வில்லேஜ் கண்காட்சி உலக நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் கவர்ந்தும்  சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் மேலும் மே 2-ஆம் தேதி வரை கண்காட்சி நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும் மாலை 4 மணி அளவில் வங்கி இரவு 12 மணி வரை கண்காட்சி நடந்து வருவதாகவும் இஸ்லாமியருக்கான ரமலான் மாதம் ஏப்ரல்  13 தேதி தொடங்குவதால் அம்மாதம் முழுவதும் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் வார விடுமுறை நாட்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் நள்ளிரவு 1 மணி வரை அனுமதிக்கபடுவதாக தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து கண்காட்சியில் கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி என அனைத்தும் சரியான முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வந்த செல்வதால் முழுமையான பாதுகாப்பு சூழ்நிலைகளை உடன் கண்காட்சி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா சவுதி அரேபியா ஏமன்  நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாகவும் குழந்தைகள் விரும்பும் அளவிற்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவு வகைகளும் இருந்தன . சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அனைவரும் இந்த கண்காட்சியை பெரிதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கண்டுகளித்து வருகின்றனர் என்று குளோபல் வில்லேஜ் கண்காட்சியின் தலைமைச் செயலாளர் பதர் அன்வகி கூறியுள்ளார்.

Categories

Tech |