நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் விரைவில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் அதாவது 157 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் என்றும் 18 பிளஸ் வயதினர் பார்க்கக்கூடிய படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .