Categories
உலக செய்திகள்

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்.. ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கருத்து கணிப்பு..!!

இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குறித்த கருத்து கணிப்பு இன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்றுள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்திற்கான கருத்து கணிப்பு நேற்று நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் அது இன்று தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, இன்று நடைபெற்ற கருத்துக் கணிப்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. மேலும் இதில் 14 நாடுகள் பங்கேற்கவில்லை. அதில் இந்தியாவும் அடங்கும். மேலும் இந்தக் கருத்துக் கணிப்பிற்கு முன்பு இந்தியா அறிக்கை ஒன்று தாக்கல் செய்துள்ளது. அதில் 13ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வலியுறுத்தியிருக்கிறது.

அதாவது இலங்கை மனித உரிமைகள் குறித்த அணுகுமுறை தொடர்பாக இந்தியா 2 அடிப்படைக் கருத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் இலங்கை தமிழர்களுக்கு சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான ஆதரவும் ஒன்றாகும். இன்னொன்று இலங்கையில் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான உறுதி ஆகிய இவை இரண்டிற்கும் ஒன்றிணைந்த ஆதரவு உள்ளதாக தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளது.

மேலும் இவை இரண்டையும் அடையாளம் காண்பதில் இலங்கைக்குரிய செயல்பாடு மிகவும் சிறந்தது. மேலும் அரசியல் அதிகாரத்திற்கான பகிர்வில் இலங்கை அரசு அதற்குரிய கடமைகளை முழுவதுமாக நிறைவேற்ற சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ளதை வரவேற்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

Categories

Tech |