சாதாரண சளியை உருவாக்கும் ரைனோ வைரஸில் கொரோனவை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் பப்லோ முற்சியா. இவர் எம்.ஆர்.சி கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் கொரோனா வைரஸ் மற்றும் ரைனோ வைரஸ் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி மனிதர்களுக்கு சாதாரண சளியை ஏற்படுத்தக்கூடிய ரைனோ வைரஸில் கொரோனவை தடுப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதை அவர் கண்டுபிடித்துள்ளார்.
அதாவது ரைனோ வைரசால் பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாச குழாயினுள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதாக பப்லோ முற்சியா தெரிவித்துள்ளார். மேலும் ரைனோ வைரஸ் பரவுவதால் கொரோனா தொற்றுநோய் பரவுவது ஓரளவு குறையலாம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அடுத்த கட்டமாக கொரோனா – ரைனோ வைரஸின் தாக்கம் குறித்தும் அவற்றின் மூலக்கூறு அமைப்பு குறித்தும் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.