மருத்துவமனையில் அமமுக வேட்பாளர் காமராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது மகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினர் செய்த தவறை குறை கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
இதையடுத்து இடையில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ் காமராஜ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய மகன் ஜெயேந்திரன் என்பவர் அவருக்காக மன்னார்குடி தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.