நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் 400 ஆக இருந்த நிலையில் தற்போது 795 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா பரவி வருவதாக அரசு தகவல் அளித்துள்ளது.