Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீரின்றி அமையாது உலகு”… உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு… சீரமைக்கப்பட்ட புதுக்கண்மாய் வரத்து கால்வாய்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புதுக்கண்மாய் வரத்து கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்றது.

தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள கரியாம்பட்டி கிராமத்தில் புதுக்கண்மாய் வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு எஸ்.புதூர் ஆக்ஸிஸ் அறக்கட்டளை மற்றும் தானம் அறக்கட்டளை சார்பில் சீரமைப்பு பணி நடைபெற்றது.

இதற்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. இந்த சீரமைப்பு பணிக்கு வயலக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த சீரமைப்பு பணியில் வயலக பணியாளர் ராணி, வட்டார வயலக திட்ட நிர்வாகி செல்வமணி, ஆயக்கட்டுதாரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |