Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் விடாமல் பெய்த கனமழை… ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகள்… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் கொடைக்கானலில் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு குளுகுளு சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் கோடை மழையுடன் தொடங்கும். இந்த வருடம் சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பின் மாலை நேரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலையும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் நிலவி வந்தது.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் நேற்று முன்தினம் காலையில் அதிக அளவில் இருந்தது. அதன்பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் விடாமல் கனத்த மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் பியர் சோலா அருவி, பாம்பார் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்கு இதமான சூழ்நிலை நிலவியது. இதன் காரணமாக சுற்றுலா தளத்திற்கு வரும் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |