காலை எழுந்ததுமே அனைவருமே உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடல் மற்றும்மனதை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்து கொள்ள முடியும். நடைபயிற்சி, ஜிம்மிற்கு சென்று கடின உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அழகை பராமரிக்க வேண்டும் என்பதற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் உடற்பயிற்சிகள் செய்து வருகின்றனர்.
மேலும் அதிக எடை இருப்பவர்கள் உடல் எடையை பராமரிக்க உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆனால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உடற்பயிற்சி செய்வது ஆபத்தானது. உடற்பயிற்சிக்கு இடையில் ஓய்வு நாட்கள் இருப்பது முக்கியம். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மன அழுத்தம், மனச்சோர்வு, உடல் சோர்வு, தூக்கமின்மை, குடல் பிரச்சினை ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கும்.