Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக்கப்பட்ட வாகன சோதனை… காரில் சிக்கியவை… பறக்கும் படை பறிமுதல்..!!

பெரம்பலூர் நான்கு வழி சாலையில் வாகன சோதனையின்போது காரில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 910 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணங்களை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அவர் குன்னம் பகுதியில் வசித்து வரும் மருதமுத்து என்பவரது மகன் சேட்டு என்பது தெரியவந்தது. மேலும் அவர் ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்து 910 பணத்தை ஆவணம் இல்லாமல் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரிடமிருந்த ஆவணம் இல்லாத பணத்தை பறிமுதல் செய்தனர். அதன் பின் அந்த பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |