என் நாட்டு மக்களுக்காக விடுமுறையை எடுக்காமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்காக விடுமுறை எடுக்காமல் குஜராத் முதல்வர், பிரதமர் என 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லையில் பதற்றம், புயல், மழை, வெள்ளம், பூகம்பம், வெட்டுக்கிளி தாக்குதல்கள், அதற்கும் மேலாக கொரோனா வைரஸ் என பல சவால்களை சந்தித்து வலிமையாக நான் எழுந்து நிற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.