உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதில் அத்திக்கு நிகரில்லை என்பார்கள் .அதன் ஒருசில பயன்களை இங்கு காணலாம் .
தினமும் 2 அத்தி பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிடுவது போதுமானது .
எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த மருந்து .
அத்திப் பழச் சாறுடன் தேன்கலந்து அருந்துவதன்மூலம் மூலநோயைக் குணப்படுத்தலாம்.உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
அத்திப்பழத்தை உலர்த்தி பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மலடு நீங்கும் . உடல் பலம் பெற நினைப்பவர்கள் தினமும் இரவில் பசும்பாலில் காய்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும் .